கொமடோர் அனில் போவத்த கடற்படையின் பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக கொமடோர் அனில் போவத்த இன்று (2024 ஜனவரி 23) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நிர்வாக அலுவலகத்தில் பதவியேற்றார்.

கொமடோர் அனில் போவத்த, பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கு முன்னர் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதியாக பணியாற்றினார்.

இதன்படி, தற்காலிக பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய கொமடோர் இந்திக டி சில்வா, புதிய பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்ற கொமடோர் அனில் போவத்தவிடம் அந்த பதவிக்கான கடமைகளை கையளித்தார்.