வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நளின் நவரத்ன பதவியேற்பு
வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நளின் நவரத்ன இன்று (2024 ஜனவரி 19) வட மத்திய கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.
கடற்படை மரபுப்படி வடமத்திய கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் நளின் நவரத்னவை வரவேற்ற பின்னர், குறித்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.
மேலும், வடமத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் தனது வாழ்த்துக்களை தெரிவித்த பின் ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, கடற்படையின் மரபுப்படி வடமத்திய கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெற்றுள்ளதுடன், ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட எதிர்காலத்தில் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பதவியேற்க உள்ளார்.