580 கிலோமீற்றர் தூரம் நடந்து இலங்கையின் புதிய சாதனையை படைக்கவுள்ள கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே சிறிவர்தன நான்காவது நாள் நடைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்
08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து புதிய இலங்கை சாதனையைப் படைக்கும் நோக்கில் 2024 ஜனவரி 12 ஆம் திகதி வவுனியாவில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்த கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே.சிறிவர்தன, நான்காவது நாள் நடைபயணத்தை 2024 ஜனவரி 15 ஆம் திகதி மாலைக்குள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
மாதம்பே முதல் சுதந்திர சதுக்கம் வரையிலான நான்காவது நாளில் 76 கிமீ மற்றும் 400 மீற்றர்களை நிறைவு செய்ததன் மூலம், அவர் தற்போது 294 கிமீ மற்றும் 400 மீற்றர் தூரத்தை கடந்துள்ளார்.
இலங்கை கடற்படையின் அனுசரணையில், புதிய தேசிய சாதனையை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைபயணம், விளையாட்டு அமைச்சின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டிற்கு உட்பட்டு நடத்தப்படுகிறது.
அத்துடன் ஐந்தாம் நாளான 2024 ஜனவரி மாதம் 16 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்திலிருந்து நிட்டம்புவ வரை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு 08 நாட்களில் நடக்கவிருந்த 580 கிலோமீற்றர்களில் பாதியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.