ரியர் அட்மிரல் தம்மிக்க குமார கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் தம்மிக்க குமார தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 15) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் தம்மிக்க குமார அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, 1988 ஆம் ஆண்டில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 06 வது உள்வாங்கலைச் சேர்ந்த கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்துகொண்டார். 35 வருடங்களுக்கும் மேலாக தனது சேவையில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். மேலும், அவர் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பயிற்சி கேப்டன், கடற்படை தளபதியின் மூத்த உதவி மற்றும் தனியார் செயலாளர், சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கடற்படை பயிற்சி பணிக்குழுவின் தலைவர், கடற்படை தளபதியின் கடற்படை உதவியாளர், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி, இயக்குனர் ஜெனரல் பயிற்சி, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி , தன்னார்வ கடற்படை மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை தளபதி என முக்கிய பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார்.

மேலும், ரியர் அட்மிரல் தம்மிக்க குமார 2023 ஆகஸ்ட் 21 முதல் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடமைகளை பொறுப்பேற்று, குறித்த பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார்.