இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்திய தூதுவர் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான எகிப்திய தூதுவராக பணியாற்றும் கெளரவ Maged Mosleh அவர்கள் இன்று (2024 ஜனவரி 10) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

இதன்படி, கடற்படைத் தளபதியினால் கடற்படைத் தலைமையகத்திற்கு வந்த எகிப்திய தூதுவர் கெளரவ Maged Mosleh அவர்களை வரவேற்றதன் பின்னர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் சுமுகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.