இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களனி ரஜமஹா விகாரையில் விசேட சமய நிகழ்ச்சிகள் மேற்னொள்ளப்பட்டது
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் விசேட சமய நிகழ்வொன்று 2023 டிசம்பர் 29 ஆம் திகதி களனி ரஜமகா விகாரையில் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையினருக்கு ஆசிர்வாதம் வழங்கும் வகையில் தொடர் சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் இந்து சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சமய நிகழ்ச்சிகளின் தொடரின் கடைசி நிகழ்ச்சியாக, கடற்படை பௌத்த சங்கம் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் களனி நிறுவகத்தின் ஏற்பாட்டில் பௌத்த சமய முறைப்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன்படி, கடற்படைத் தளபதியும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவியும் முதலில் களனி ரஜமஹா விகாரையின் விகாராதிபதியான பேராசிரியர் மஹிந்த சங்கரக்கித தேரரை நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர். இந்த ஆன்மிக நிகழ்வின் போது, மகா சங்க உறுப்பினர்களினால் வீரமரணம் அடைந்த கடற்படை வீரர்கள், அங்கவீனமுற்ற கடற்படை வீரர்கள், பணியாற்றி ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கடற்படையினர் ஆகியோருக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வுக்காக கடற்படைப் தலைமை பிரதானி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, கடற்படை பௌத்த சங்கத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க, உட்பட கடற்படை பணிப்பாளர் நாயகம் கடற்படை சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள், கொடி அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட மாலுமிகள் கலந்து கொண்டனர்.