கடற்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் வகையில் சமய மற்றும் சமூக நலத் திட்டங்களை கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர், இதன் கீழ் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி இரத்ததான நிகழ்ச்சிகள் 2023 டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கிழக்கு, வடக்கு, வட மத்திய, வட மேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைகளை மையமாக கொண்டு இந்த இரத்ததான சமூக நலம் நிகழ்ச்சித் தொடர் இடம்பெற்றது. திருகோணமலை பொது வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, முல்லைத்தீவு பொது வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெலிப்பளை ஆதார வைத்தியசாலை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலை, தேசிய இரத்ததான சேவை கொழும்பு, கராப்பிட்டி போதனா வைத்தியசாலை மற்றும் பொத்துவில் போதனா வைத்தியசாலை ஆகிய இடங்களிலுள்ள இரத்த மாற்று நிலையங்களின் இரத்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த இரத்த தானம் சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இந்த மாபெரும் சமூக நிகழ்வை வெற்றியடையச் செய்வதற்காக, அனைத்து கடற்படைக் கட்டளைகளையும் சேர்ந்த பெருமளவிலான கடற்படை வீரர்கள் முன்வந்து பங்களித்தனர்.