இந்தோனேசிய கடற்படையின் ‘KRI DIPONEGORO- 365’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘KRI DIPONEGORO- 365’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 டிசம்பர் 21) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

இவ்வாறாக, கொழும்பு துறைமுகத்திற்கு வந்த IDN Warship Corvette வகையின் போர்க்கப்பலான ‘KRI DIPONEGORO- 365’ கப்பல் 90.71 மீட்டர் நீளம் கொண்டுள்ளதுடன் மொத்தம் நூற்றி இருபது (120) கடற்படையினர் கப்பலில் உள்ளனர். கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் WIRASTYO HAPRABU அவர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்.

மேலும், ‘KRI DIPONEGORO- 365’ என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் கட்டளை அதிகாரி அவர்கள் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ஆகியோருடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்த உள்ளார். மேலும், அதன் கடற்படையினர் தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும் குறித்த கப்பல் 2023 டிசம்பர் 23 ஆம் திகதி தீவை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டுள்ளது.