இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதி இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கௌரவ Major General (R) Umar Farooq Burki அவர்கள் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கு இடையில் இன்று (2023 டிசம்பர் 21) உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பொன்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
அதன்படி, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கௌரவ Major General (R) Umar Farooq Burki அவர்களை கடற்படைத் தலைமையகத்திற்குப் அன்புடன் வரவேற்கப்பட்ட பின்னர், முக்கியமான விடயங்கள் தொடர்பான கருத்துப் பரிமாற்றம் இருதரப்பு ரீதியாக இடம்பெற்றதுடன், இலங்கையின் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஆதரவு தொடர்பில் கடற்படைத் தளபதி அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன் அவரது எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மட் பாரூக் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு கடற்படைத் தளபதி நினைவுச் சின்னமொன்றும் வழங்கினார்.