இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்ற Commodore M Moniruzzaman, அவர்கள் இன்று (19 டிசம்பர் 2023) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.
இதன்படி, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் Commodore M Moniruzzaman அவர்களை கடற்படைத் தலைமையகத்திற்கு கடற்படைத் தளபதி வரவேற்ற பின்னர், கடற்படைத் தளபதி மற்றும் பங்களாதேஷின் புதிய பாதுகாப்பு ஆலோசகருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சிநேகபூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.