பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பதினேழாவது (17) பாடநெறிக்கான விருந்தினர் விரிவுரையை கடற்படைத் தளபதி நடத்தினார்
சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகுவின் அழைப்பின் பேரில் கல்லூரியின் பதினேழாவது (17) பாடநெறிக்கான விருந்தினர் விரிவுரையை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் 2023 டிசம்பர் 04 ஆம் திகதி குறித்த கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.
சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பாடநெறி எண். 17 யின் கீழ் 72 இராணுவ கெடட் அதிகாரிகள், 26 கடற்படை கெடட் அதிகாரிகள், 24 விமானப்படை கெடட் அதிகாரிகள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியுடன் பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா, செனகல், அமெரிக்கா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 வெளிநாட்டு மாணவர் அதிகாரிகள் உட்பட 148 மாணவர் அதிகாரிகள் இந்த கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறியை படிக்கின்றனர்.
இதன்படி, பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களால் வரவேற்கப்பட்ட பின்னர், “Maritimization; Request for a viable maritime strategy and Sri Lanka Navy” என்ற தலைப்பில், கடற்படைத் தளபதி பதினேழாவது (17) பணியாளர் பாடநெறியின் மாணவர் அதிகாரிகளுக்கு உரையாற்றினார். கடற்படைத் தளபதி தனது உரையில், இலங்கையின் கடல் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும், இந்து சமுத்திரத்தில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள ஒரு தீவு நாடாக இலங்கையின் பலம் மற்றும் பலவீனங்களையும் வலியுறுத்தினார். ஒரு தீவு நாடாக சமுத்திரத்தின் ஊடாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உத்திகள் குறித்து விரிவாகக் கருத்துரைத்த கடற்படைத் தளபதி, புதிய புவிசார் அரசியல் போக்குகளுக்குப் பதிலளிப்பதற்கு வலுவான கடல்சார் உத்திகள் தேவை என்றார். குறிப்பாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில், புவிசார் அரசியல் புதிய போக்குகளுக்கு பதிலளிக்கும் வகையில், வலுவான கடல்சார் உத்திகள் தொடர்ந்து ஆராயப்பட வேண்டும், மேலும் கடலில் மேற்கொள்ளப்படும் நீலப் பொருளாதாரம், கடல்சார் தொழில் மற்றும் கடல்சார் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் முக்கியத்துவம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின், மாறிவரும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் முகமாக இலங்கை கடற்படையின் பங்கு குறித்து இந்த விரிவுரையில், பதினேழாவது (17) பாடநெறியின் மாணவர் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் 2023 டிசம்பர் 04 ஆம் திகதி பணியாளர் கல்லூரியின் பதினேழாவது (17) பாடநெறிக்காக நடத்திய விருந்தினர் விரிவுரைக்காக சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கடற்படை பிரதம ஆலோசகர் ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க, பிரதித் தளபதி பிரிகேடியர் அஜித் விக்கிரமசேகர, இராணுவ தலைமை ஆலோசகர் பிரிகேடியர் சுபாத் சஞ்சீவ, பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, பிரிகேடியர் டப்.எஸ் கமகே, விமானப்படை தலைமை ஆலோசகர் எயார் கொமடோர் எஸ்.டி ஜயவீர உட்பட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பதினேழாவது (17) பணியாளர் பாடநெறியைச் சேர்ந்த ஏனைய மாணவர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்களை பரிமாறப்பட்டதன் பின்னர், பணியாளர் கல்லூரியில் உள்ள விருந்தினர்களின் விசேட புத்தகத்தில் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.