73 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இஸ்லாமிய மத நிகழ்ச்சி கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது

2023 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் தொடர் சமய நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய சமய நிகழ்ச்சி இன்று (2023 டிசம்பர் 02) கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் பெருமைக்குரிய 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் பல சமய நிகழ்வுகள் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சமய நிகழ்ச்சிகள் தொடரின் ஆரம்பமாக, கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வு ருவன்வெலி மஹா சேய அருகில் மற்றும் ஜய ஸ்ரீ மஹா போதி அருகில் 2023 நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன், கிறிஸ்துவ சமய வழிபாடுகள் பொரளை அனைத்து புனிதர்களின் பேராலயத்தில் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது. மேலும், கொழும்பு, வெலிசர கடற்படை வளாகத்தில் 2023 நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இரவு முழுவதும் பிரித் ஓதுதல் மற்றும் அன்னதானம் வழங்கியதுடன், 2023 டிசம்பர் 01 ஆம் திகதி கொழும்பு, ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆழயத்தில் இந்து சமய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

அதன்படி, பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர், ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரியவின் தலைமையில் இன்று (2023 டிசம்பர் 02) கொழும்பு கோட்டை செத்தம் தெரு ஜும்மா பள்ளிவாசலில் வணக்கத்திற்குரிய ஆஷிக் அம்ஹர் மவுலவி அவர்களால் இஸ்லாமிய வழிபாடுகள் நடைபெற்றதுடன் இங்கு நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த, அங்கவீனமாகிய மற்றும் தற்போது சேவையாற்றும் கடற்படை வீரர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினர்களுக்கும், முழு கடற்படையினருக்கும் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆசிகள் வழங்கப்பட்டது.

இதன்போது, பணிப்பாளர் கடற்படை பயிற்சிகள் கொமடோர் புத்திக ஜயவீர, செயல் பணிப்பாளர் கடற்படை வெளிநாட்டு கொள்வனவு கப்டன் பிரஷான் மாசோ, இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் சாரக ஹேரத், பிரதி பணிப்பாளர் விளையாட்டு கெப்டன் அன்டன் பெர்னாண்டோ மற்றும் கடற்படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் கடற்படையினர் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கலந்து கொண்டனர்.