நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுக்கும் செயலணி மற்றும் ஊடக நிறுவனங்கள் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது
இலங்கையில் நச்சு மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுக்கும் செயலணியின் தளபதி மற்றும் கடற்படையின் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2023 நவம்பர் 29 ஆம் திகதி ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதன்படி, நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுக்கும் செயலணியின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் ஊடகங்களை பயன்படுத்தும் போது எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டி தயாரிப்பது தொடர்பில் நீண்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாட்டில் நச்சு மற்றும் ஆபத்தான போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.