இலங்கை கடற்படை சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் - 2023 பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

2023 டிசம்பர் 8 ஆம் திகதி ஈடுபடுகின்ற இலங்கை கடற்படை சங்கத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வருடாந்த ஒன்றுகூடல் கடற்படை சங்கத்தின் கௌரவத் தலைவரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) தலைமையில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களின் பங்கேற்புடன் 2023 நவம்பர் 25 அன்று வெலிசரவில் (Wave n’ Lake Navy Hall) பிரமாண்டமாக நடைபெற்றது.

ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களின் நலன் கருதி 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை கடற்படை சங்கம், கடந்த சில வருடங்களாக ஓய்வுபெற்ற கடற்படையினர் மற்றும் செயலில் கடமையாற்றிய கடற்படையினருக்கான பல்வேறு நலன்புரி திட்டங்களை மிகவும் முறையாக நடத்தி வருகின்றது. இன்றைய நிலவரப்படி ஓய்வுபெற்ற சுமார் பத்தாயிரம் கடற்படை வீரர்கள் கடற்படை சங்கத்தின் கெளரவ அங்கத்துவத்தைப் பெற்றுள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு கடற்படை சங்கத்தின் வருடாந்த நட்புறவுக் கூட்டத்திற்கு, முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதியும் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் தயா சண்டகிரி (ஓய்வு), சங்கத்தின் முன்னாள் கௌரவத் தலைவர், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதன்ன (ஓய்வு) மற்றும் கௌரவ உப தலைவர் ரியர் அட்மிரல் டி.எம்.ஜே.மென்டிஸ் (ஓய்வு) ஆகியோர் உட்பட சங்கத்தின் சுமார் ஐந்நூறு பேர் கலந்துகொண்டதுடன் கௌரவத் தலைவரின் அழைப்பின் பேரில் சுமார் நூறு கடற்படையினர் அடங்கிய குழுவினரும் இந்த நட்புறவுச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.