கடற்படை மரியாதைக்கு மத்தியில் ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக தனது சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 நவம்பர் 23) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

1988 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையில் 02 வது காலாட்படை உள்வாங்கலின் கேடட் அதிகாரியாக இணைந்த ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும தனது 35 வருட சேவையின் போது புகழ்பெற்ற கடற்படை பணியின் பல தளவாட நியமனங்களை மேற்கொண்டார். அவர் மூத்த பணியாளர் அதிகாரி (கடற்படை காலாட்படை), கட்டளை நில நடவடிக்கை அதிகாரி (வடக்கு), கட்டளை நில நடவடிக்கை அதிகாரி (மேற்கு), கட்டளை நில நடவடிக்கை அதிகாரி (தென் கிழக்கு), கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரி (வடக்கு), கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை வடக்கு), கடற்படை கட்டளை அதிகாரி (தீவுகள்), கட்டளை நில செயல்பாட்டு அதிகாரி (தெற்கு), கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரி (தெற்கு), கடற்படை நில நடவடிக்கைகளின் துணை இயக்குனர், கடற்படை காலாட்படை மற்றும் தளபதி மரைன் காலாட்படை போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க பதவிகளில் பணியாற்றினார்.