இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS KORA’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 நவம்பர் 16 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Kora’ கப்பல் வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இன்று (2023 நவம்பர் 17) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

இவ்வாறாக, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Missile Corvette வகையின் கப்பலான ‘INS Kora’ 91.1 மீற்றர் நீளம் கொண்டதுடன் மொத்தம் நூற்று இருபத்தைந்து (125) கடற்படையினரை கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் RM Nambiar அவர்களுக்கும் இலங்கை தொண்டர் கடற்படையின் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியான ரியர் அட்மிரல் சமன் த பெரேரா அவர்களுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று 2023 நவம்பர் 16 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

மேலும், ‘INS Kora’ என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், அதன் கடற்படையினர் தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.