வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவேந்தலின் அடையாளமாக கடற்படைச் சங்கத்தின் உறுப்பினர்கள் கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலரொன்று அணிவித்தனர்
போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் பிரச்சாரத்தையொட்டி, இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு இன்று (2023 அக்டோபர் 24) கடற்படைத் தலைமையகத்தில் பொப்பி மலரொன்று அணிவித்தார்.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவு கூறும் வகையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பொப்பி மலர் கொண்டாட்டம் இன்று தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீர வீரர்களையும் நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, போரின் போது உயிர் தியாகம் செய்த அனைத்து கடற்படை வீரர்களையும் நினைவுகூரும் வகையில், இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் இன்று (2023 ஒக்டோபர் 24) கடற்படைத் தளபதிக்கு கடற்படை தலைமையகத்தில் பொப்பி ஒன்றை அணிவித்தார்
மேலும், இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்னவிற்கும் பொப்பி மலர் ஒன்றை அணிவித்தார். இந்நிகழ்வில் இலங்கை கடற்படை சங்கத்தின் உப தலைவர் ரியர் அட்மிரல் மணில் மெண்டிஸ் (ஓய்வு) மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.