ரியர் அட்மிரல் அசங்க ரணசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக தனது சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரியர் அட்மிரல் அசங்க ரணசூரிய தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 ஒக்டோபர் 20) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் அசங்க ரணசூரிய அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிறுவனத்தின் கட்டளை அதிகாரி மற்றும் செயற்படும் கடற்படை கட்டளை அதிகாரி (பூனேவ), பிரதி பணிப்பாளர் கடற்படை பயிற்சி, கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதி தளபதி, கடற்படை உள் தணிக்கை பணிப்பாளர் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகத்தில் பணிப்பாளர் நாயகம் கடற்படை மற்றும் விமானப்படை செயல்பாடுகள் ஆகிய பல்வேறு குறிப்பிடத்தக்க பதவிகளில் பணியாற்றினார்.