இந்திய கடற்படையின் ‘INS AIRAVAT’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Airavat’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 அக்டோபர் 18) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

இவ்வாறாக, கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Landing Ship Tank – Large (LST - L) வகையின் போர்க்கப்பலான ‘INS Airavat’ நூற்று இருபத்து நான்கு தசம் எட்டு மீட்டர் (124.8) நீளம் கொண்டதுடன் மொத்தம் நூற்று எழுபது (170) கடற்படையினரை கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் ரிந்து பாபு (Commander Rindu Babu) மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் த பெரேரா ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று காலை (2023 அக்டோபர் 18) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

மேலும், ‘INS Airavat’ என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்ச்சிகளில், அதன் கடற்படையினர் பங்கேற்கவும், தீவின் முக்கிய இடங்களை மற்றும் பல பகுதிகளை பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.