இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘KRI BIMA SUCI - 945’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 அக்டோபர் 14 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான BAROUE CLASS வகையின் பயிற்சிக் கப்பல் ‘KRI BIMA SUCI - 945’ வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இன்று (2023 அக்டோபர் 15) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

மேலும், 'KRI BIMA SUCI - 945' என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், கப்பலின் பணியாளர்கள் இலங்கையில் சில சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றனர்.