நிகழ்வு-செய்தி
இந்தோனேசிய கடற்படையின் ‘KRI BIMA SUCI - 945’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான BAROUE CLASS வகையின் ‘KRI BIMA SUCI - 945’ என்ற பயிற்சிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 அக்டோபர் 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
14 Oct 2023
காலி கலந்துரையாடல் 2023 சர்வதேச கடல்சார் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் Geopolitical Cartographer (GC) நிருவனம் பதினொன்றாவது (11வது) முறையாக ஏற்பாடு செய்த காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு இலங்கை ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட இராஜதந்திர அதிகாரிகள், 42 நாடுகள் மற்றும் 11 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல கடல்சார் பாதுகாப்பு அறிஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் 2023 அக்டோபர் 12 ஆம் திகதி காலி ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமானதுடன் இரண்டு நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்ற இந்த மாநாடு 2023 அக்டோபர் 13 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவுற்றது.
14 Oct 2023


