இந்தோனேசிய கடற்படையின் ‘KRI BIMA SUCI - 945’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான BAROUE CLASS வகையின் ‘KRI BIMA SUCI - 945’ என்ற பயிற்சிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 அக்டோபர் 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'KRI BIMA SUCI - 945' என்ற கப்பல் 112.02 மீற்றர் நீளமும், மொத்தம் 95 கடற்படையினர கொண்டுள்ளதுடன் கொமான்டர் M. SATI LUBIS கப்பலின் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகிறார்.
மேலும், 'KRI BIMA SUCI - 945' என்ற கப்பல், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் கடற்படையினர் இலங்கையில் முக்கிய இடங்களைப் பார்வையிட உள்ளனர்.
மேலும், இந்தக் 'KRI BIMA SUCI - 945' என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு 2023 அக்டோபர் 15 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட உள்ளது.