காலி கலந்துரையாடல் 2023 சர்வதேச கடல்சார் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் Geopolitical Cartographer (GC) நிருவனம் பதினொன்றாவது (11வது) முறையாக ஏற்பாடு செய்த காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு இலங்கை ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட இராஜதந்திர அதிகாரிகள், 43 நாடுகள் மற்றும் 11 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல கடல்சார் பாதுகாப்பு அறிஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் 2023 அக்டோபர் 12 ஆம் திகதி காலி ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமானதுடன் இரண்டு நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்ற இந்த மாநாடு 2023 அக்டோபர் 13 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவுற்றது.
ஐந்து (05) அமர்வுகள் கொண்ட இந்த சர்வதேச மாநாட்டின் இரண்டாவது நாளில் (2023 அக்டோபர் 13) மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது அமர்வுகள் வெற்றிகரமாக நடைபெற்றன. அதன்படி, பேராசிரியர் Geoffrey Till தலைமையில் Maritime Environment Protection for Collaborative Maritime Prosperity, என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற மூன்றாவது அமர்வில், Nexus Between Climate Change Impacts & Maritime Security என்ற தொனிப்பொருளின் கீழ் கடற்படையின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவினால் விளக்கக்காட்சி வழங்கப்பட்டது. Incidents at Sea & the Readiness of Coastal States to Prevent Maritime Environmental Disasters & Post Recovery என்ற கருப்பொருளின் RAdm Md. Khurshed Alam (Retd) அவர்கலும், Regulatory & Procedural Framework of Managing Maritime Casualties in Coastal Waters என்ற கருப்பொருளின் திருமதி Ms. Sarah Lou Y. ARRIPOLA அவர்கலும், Shared Prosperity Through Preserving & Protecting Underwater Maritime Heritage என்ற கருப்பொருளின் அட்மிரல் பியல் டி சில்வா (ஓய்வு) அவர்கலும் விரிவுரைகளை வழங்கினர்.
Maritime Domain Awareness என்ற கருப்பொருள் குறித்து, பேராசிரியர் திரு. Mr. Wade David Turvold நடத்திய நான்காவது அமர்வில், Maritime Domain Awareness: Shifting Paradigms for Merging Interest என்ற தலைப்பில், திருமதி Ms. Siji Song அவர்களும் Dark Shipping: Collaborative Efforts Information Fusion என்ற தலைப்பில் VAdm Emmanuel SLAARS அவர்களும் விரிவுரைகளை வழங்கினர்.
மேலும், Collaborative Enforcement for sustainable Ocean Governance என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொழும்பகே (ஓய்வு) தலைமையிலான ஐந்தாவது அமர்வில், Role of UNCLOS for the Resolution of Grey Zone Maritime Conflicts என்ற தலைப்பில், பேராசிரியர் Vijay Sakhuja அவர்களும். Collaborative Governance for Sustainable Development & Marine Resources Management என்ற தொனிப்பொருளின் கீழ் First Admiral Dr. TAY Yap Leong அவர்களும் Regional Frameworks for Sustainable Ocean Governance: IORA, SAARC,BIMSTEC என்ற தொனிப்பொருளின் கீழ் திருமதி ஷானிகா திஸாநாயக்க அவர்களும் விரிவுரைகளை வழங்கினர்.
மாநாட்டின் இரண்டாம் நாளுடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மாநாட்டில் பங்குபற்றிய கடற்படைத் தலைவர்கள், கடல்சார் பங்குதாரர்கள் மற்றும் கடல்சார் துறையின் கல்வியாளர்களுடன் இருதரப்பு உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்தினார். அதன்படி, இந்தியாவின் சிங்கப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Raymond Ong, இந்திய அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ராம் மாதவ் (Ram Madhav –President Indian Foundation), சீனக் கடற்படையின் துணைத் தலைவர் RAdm LI Pengcheng (Deputy Chief of Staff of the Chinese PLA Navy), பிரிட்டிஷ் கடற்படையின் Commodore SP Kelly (Deputy Commander UK Strike Force),ஓமான் கடற்படையின் Cmde Adnan bin Salim bin Khamis Al Raisi (Commandant Sultan Qaboos Naval Academy), ஜப்பான் தற்காப்பு கடல் படையின் RAdm Takenaka Nobuyuki (Director General of Operations and Plan Department), மலேசிய கடற்படையின் First Admiral (Commodore) Dr. Tay Yap Leong ( Senior Director), கடல்சார் கொள்கைக்கான கார்பெட் மையத்தின் தலைவர் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியர். Prof. Geoffrey Till (Chairman of the Corbett Centre for Maritime Policy Studies & Professor of King’s College London), இலங்கைக்கான ஜெர்மன் பாதுகாப்பு ஆலோசகர் Captain Gerald Koch (German- DA), இலங்கைக்கான எகிப்திய தூதர் திரு Maged Mosleh (Ambassador of Egypt in Colombo, Sri Lanka), திரு. கிருஷ்ணஸ்வாமி நடராஜன் (ReCAAP - Exective Director & Manager of Operation Department), CRIMARIO நிருவனத்தின் திரு. Martin Cauchi Inglott அவர்கள் (CRIMARIO -Project Director), இந்திய கடற்படையின் தலைமைத் தளபதி VAdm Tarun Sobti (Deputy Chief of Naval Staff), கனேடிய பசிபிக் கடற்படையின் தளபதி Commodore David Mazur (Commander Canadian Fleet Pacific) ஆகிய வெளிநாட்டு கடற்படைத் தலைவர்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் கடல்சார் துறையில் உள்ள நிபுணர் பிரதிநிதிகளுடன் இருதரப்பு முக்கிய கருத்துக்கள் பரிமாறிகொள்ளப்பட்டன.
அதன்படி, வெற்றிகரமாக நிறைவடைந்த காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் நன்றியுரை கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவினால் நடத்தப்பட்டது. அங்கு முதலாவதாக, இந்த சர்வதேச கடல்சார் மாநாட்டை மிக உயர்ந்த முறையில் ஏற்பாடு செய்ததற்காக கடற்படைக்கு ஆதரவளித்த பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் Geopolitical Cartographer (GC) நிருவனத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர், காலி உரையாடல் சர்வதேச மாநாட்டில் பங்குபற்றிய வெளிநாட்டு கடற்படைத் தளபதிகளின் பங்கேற்பைப் பாராட்டியதாக கடற்படையின் பிரதிப் பிரதானி தெரிவித்தார். மேலும், கடற்படையின் விசேட அழைப்பை ஏற்று கடல்சார் துறையில் புதிய அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள உதவிய அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியாளர்கள், இராஜதந்திர அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பிற வளவாளர்களுக்கு மரியாதை செலுத்துவதாக கூறினார். அத்துடன், காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனுசரணை வழங்கிய அவன்கார்ட்மெரி டைம் சர்விஸஸ் (Avan garde Maritime Services), டொக்யாட் ஜெனரல் இன்ஜினியரிங் (Dockyard General Engineering), டிரேட் ப்ரோமோட்டர்ஸ் லிமிடெட் (Trade Promoters Limited), இலங்கை வங்கி (Bank of Ceylon), டோக்கியோ சிமெண்ட் (Tokyo Cement), என்எம் டிஸ்டிபியுடர்ஸ் (NM Distributers), ஹேலிஸ் அவென்ச்சுரா (Hayless Aventura), ஃபெரெண்டினோ டயர்ஸ் (Ferentino Tyres), டயலொக் ஆசியாடா (Dialog Axiata) மற்றும் அபான்ஸ் (Abans) ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு காலி கலந்துரையாடலை வெற்றிகரமாக நடத்துவதற்காக ஜெட்விங் லைட்ஹவுஸ் மற்றும் அரலிய ஹோட்டல் நிர்வாகங்களினால் அளிக்கப்பட்ட ஆதரவை பிரதிப் தலைமைத் தளபதி பாராட்டினார். மேலும், தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க மற்றும் அந்த கட்டளையின் திணைக்களங்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
காலி உரையாடல் 2023 சர்வதேச கடல்சார் மாநாட்டின் நடவடிக்கைகளை நிறைவுசெய்து, கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகளுக்கான ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க நன்றியுரையை முன்மொழிந்தார். அங்கு, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் புவிசார் அரசியல் வரைபடவியலாளருக்கு (GC) இந்த முக்கிய நிகழ்வை ஒழுங்கமைப்பதில் அவர்களின் கூட்டு முயற்சிகளுக்கு அவர் முதலில் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும், கடல்சார் மாநாட்டில் கலந்துகொண்ட கடற்படைத் தளபதிகளுக்கும், காலி உரையாடலின் 11வது பதிப்பை பெரிதும் செழுமைப்படுத்திய புத்திஜீவிகள், இராஜதந்திரப் படையினர் மற்றும் வளவாளர்களுக்கும் அவர் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். Avant Garde Maritime Services, Dockyard General Engineering Services, Trade Promoters (Pvt) Ltd, Bank of Ceylon, Tokyo Cement, NM Distributers, Hayleys Aventura, Ferentino Tyres, Dialog Axiata ஆகியவற்றின் பங்களிப்புகளையும் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க அங்கீகரித்தார். மேலும், ஜெட்விங் லைட்ஹவுஸ் மற்றும் அராலியா ஹோட்டல் நிர்வாகம் மற்றும் தெற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, கட்டளையின் அனைத்து திணைக்களங்கள் மற்றும் பணியாளர்கள் மாநாட்டின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர்களின் பெறுமதியான பங்களிப்புகளுக்காக பிரதிப் பணியாளர்கள் நன்றி தெரிவித்தார்.
இத்தகைய கடல்சார் மாநாடுகளை நடத்துவது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பாரம்பரியமற்ற கடல்சார் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த பதிலளிப்பதற்குத் தேவையான புதிய நுண்ணறிவு, அனுபவங்கள் மற்றும் தந்திரோபாயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது. மேலும், இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள கடலோர நாடுகள் மற்றும் இந்தப் பிராந்தியத்தைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினரிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் வளர்ச்சியை வளர்க்கிறது.