காலி கலந்துரையாடல் 2023 சர்வதேச கடல்சார் மாநாடு காலியில் ஆரம்பமானது
இலங்கை கடற்படை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் Geopolitical Cartographer (GC) நிருவனம் பதினொன்றாவது (11வது) முறையாக ஏற்பாடு செய்கின்ற காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு இலங்கை ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் இன்று (அக்டோபர் 12, 2023) காலி ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமானதுடன் Emerging New Order in the Indian Ocean என்ற தொனிப்பொருளின் கீழ், இரண்டு நாட்களாக (2023 அக்டோபர் 12-13) நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் 42 நாடுகள் மற்றும் 11 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல கடல்சார் பாதுகாப்பு அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
கடல்சார் பாதுகாப்பிற்காக தற்போதுள்ள உலகளாவிய சட்ட கட்டமைப்பு மற்றும் பலதரப்பு கடல்சார் ஒத்துழைப்பு ஆகியவைக்கு சவாலாக கடல்சார் களத்தில், வழக்கத்திற்கு மாறான கடல்சார் அச்சுறுத்தல்கள் கருதப்படுகின்ற கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், மனித கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் சட்டவிரோதமான கட்டுப்பாடற்ற மற்றும் அறிக்கையிடப்படாத மீன்பிடி நடவடிக்கைகள் போன்ற பாரம்பரியமற்ற கடல்சார் அச்சுறுத்தல், கடல் வளங்களை சுரண்டுதல், கடல் மாசுபாடு, கடல் விபத்துக்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு சேதம் செய்தல் ஆகியவை உலகளவில் வளர்ந்து வருகின்றன, மேலும் இந்த பாரம்பரியமற்ற கடல்சார் அச்சுறுத்தல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியையும் எட்டியுள்ளன.
இத்தகைய பின்னணியில், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்து, கடல்சார் பொருளாதார லட்சியங்களை அடைவதற்கான கூட்டு அணுகுமுறையை நிறுவுவதற்காக இந்தியப் பெருங்கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவு நாடான இலங்கை மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலை எதிர்நோக்கி உள்ள கடலோர மாநிலங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலைப் பயன்படுத்தும் அனைத்து கடல்சார் பங்குதாரர்களுக்கும் தனித்துவமான கூட்டுப் பொறுப்பு உள்ளது. காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டு மூலம் பாரம்பரியமற்ற கடல்சார் சவால்களுக்கு கூட்டாக பதிலளிப்பதற்கு தேவையான அறிவு, அனுபவம் மற்றும் மூலோபாய உத்திகள், அத்துடன் இராணுவ தயாரிப்புகள் போன்றவற்றைப் பற்றி ஒரே தளத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் தீர்வுகளைக் காண்பதற்கும் சிறந்த வாய்ப்பை உருவாக்கும்.
அதன்படி, இன்று (ஒக்டோபர் 12, 2023) இந்த சர்வதேச மாநாட்டில் வரவேற்பு உரையை ஆற்றிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, காலி கலந்துரையாடல் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டமைக்காக ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துடன் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பிரமுகர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கடற்சார்ந்த பயிற்சியாளர்களை அவர் அன்புடன் வரவேற்றார். கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை கடற்படையின் பொறுப்பை வலியுறுத்தும் வகையில் சிந்தனையைத் தூண்டும் உரையையும் கடற்படைத் தளபதி நிகழ்த்தினார்.
இங்கு தலைமை உரையை ஆற்றிய இலங்கை ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான திரு.ரணில் விக்கிரமசிங்க, கோவிட் தொற்றுநோய் காரணமாக தொடர முடியாம போன காலி கலந்துரையாடலை மீண்டும் ஆரம்பித்தமைக்காக கடற்படையினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இராஜதந்திர அதிகாரிகள் உட்பட சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் உரையாற்றிய கௌரவ ஜனாதிபதி அவர்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் தற்போதைய புவிசார் அரசியல் போக்குகளைக் கருத்தில் கொண்டு, காலி கலந்துரையாடலின் கருப்பொருளாக "Emerging New Order in the Indian Ocean" என்ற தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்தினார்.
அதன்படி, இன்று (2023 அக்டோபர் 12), Emerging New Order in the Indian Ocean என்ற தொனிப்பொருளின் கீழ் இந்திய அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ராம் மாதவ் ( President India Foundation, Dr. Ram Madhav) மற்றும் கலாநிதி கணேசன் விக்னராஜா (Dr. Ganeshan Wignaraja) அவர்களினால் நடத்தப்பட்ட கலந்துரையாடல் மன்றம் மூலம் இந்த மாநாட்டில் கருத்துப் பரிமாற்றம் மற்றும் அறிவுப் பரிமாற்றம் நடைபெற்றது. மேலும், இன்று இந்த மாநாட்டின் முதல் அமர்வை கலாநிதி ரொஹான் பெரேரா (Dr. Rohan Perera ) அவர்களினால் Maritime Security Concerns என்ற கருப்பொருளிலும், இரண்டாவது அமர்வு Maritime Synergy to Foster Blue Economy என்ற கருப்பொருளில் கலாநிதி ராம் மாதவ் அவர்களாலும் நடத்தப்பட்டதுடன் அங்கு மாநாட்டில் கலந்து கொண்ட கட்சியினருக்கு அறிவார்ந்த கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இராணுவக் கண்டுபிடிப்புகள் குறித்து மேஜர் ஜெனரல் ரேணுக ரோவல் (ஓய்வு) அவர்களால் Indigenous Military Industry என்ற தொனிப்பொருளின் கீழ் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டுடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, தாய்லாந்து ராயல் கடற்படையின் அட்மிரல் Chatchai Thongsaard, சவூதி அரேபிய கடற்படையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் Lieutenant General Fahd bin Abdullah Al-Ghafili, பாகிஸ்தான் கடலோர காவல்படையின் தளபதி VAdm Raja Rab Nawaz HI(M), வங்கதேச கடற்படையின் RAdm Mohammad Anwar Hossain, இத்தாலிய கடற்படையின் RAdm LH Andrea VENTURA, கயானா கடற்படையின் தளபதி Brigadier Omar Sherif Khan, ரஷ்ய கடற்படையின் Rear Admiral Vladimir Zemskov,, அமெரிக்க கடற்படை பசிபிக் கப்பல் குழுவின் RAdm Eric C. Ruttenberg, இந்தோனேசிய கடற்படையின் RAdm Didong Rio Duta Purwokuntjoro மியான்மர் கடற்படையின் Capt KYAW Khaing, போலந்து கடற்படைத் தளபதி RAdm Krzysztof Jaworski, நெதர்லாந்து கடற்படையின் RAdm Harold Liebregs உட்பட பிற வெளிநாட்டு கடற்படைத் தலைவர்கள், மூத்த கடற்படை அதிகாரிகள், பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் கடல்சார் துறையைச் சேர்ந்த கல்விப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்தினர்.
மேலும், காலி கலந்துரையாடல் சர்வதேச மாநாட்டின் இறுதி நாளான அக்டோபர் 13 ஆம் திகதி, Maritime Environment Protection for Collaborative Maritime Prosperity, Maritime Domain Awareness மற்றும் Collaborative Enforcement for Sustainable Ocean Governance ஆகிய கருப்பொருள்களின் கீழ் நிபுணர் கலந்துரையாடல்கள் மற்றும் விளக்கக்காட்சிகள் மூலம் பங்குதாரர்கள் அறிவையும் அனுபவத்தையும் பரிமாறிக் கொள்ள உள்ளது.
இந் நிகழ்வில் இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட இராஜதந்திர அதிகாரிகள், தென் மாகாண ஆளுநர் திரு.விலி கமகே அவர்கள் உட்பட அரசாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான திரு. சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு. பிரமித பண்டார தென்னகோன், அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கர்ணகொட, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) உட்பட அரசாங்க அதிகாரிகள், முன்னாள் கடற்படைத் தளபதிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, கடற்படையின் பிரதிப் தலைமை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க மற்றும் கட்டளைத் தளபதிகள், கொடி அதிகாரிகள், இராணுவம் மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், காலி கலந்துரையாடல் - 2023 சர்வதேச கடல்சார் மாநாடு பற்றிய சமீபத்திய தகவல்களை www.galledialogue.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பெறலாம், மேலும் அந்த இணையதளத்தின் மூலம் 2023 அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் மாநாட்டை நேரடியாகப் பார்க்கும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.