இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் கடற்படைத் தளபதியுடன் உத்தியோகபூர்வ சந்திப்பு
இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் கௌரவ திருமதி மியோன் லீ அவர்கள் (Miyon Lee) இன்று (2023 ஒக்டோபர் 06) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
அதன்படி, இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் திருமதி மியோன் லீ (Miyon Lee) அவர்களை கடற்படைத் தலைமையகத்திற்கு கடற்படைத் தளபதி அவர்களினால் வரவேற்றதன் பின்னர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து அவர்கள் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், இலங்கைக்கான தென்கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Captain (ROK Navy) CHOI YONGSEOK அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.