இலங்கை கடற்படையினரின் பங்களிப்புடன் காலி முகத்திடல் கரையோரத்தில் மரம் நடும் நிகழ்ச்சியொன்று மேற்கொள்ளப்பட்டது
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கப்பல் நிறுவனம் இணைந்து காலி முகத்துவார கடற்கரையை மையமாக் கொண்டு மரம் நடும் நிகழ்ச்சியொன்று இன்று (2023 செப்டம்பர் 23) மேற்கொன்டுள்ளனர்.
அதன்படி, இந்த மர நடுகைத் திட்டத்தின் கீழ், காலி முகத்துவாரக் கடற்கரையை மையமாகக் கொண்டு சுமார் நூறு (100) மூதில்ல மரக்கன்றுகள் நடப்பட்டன, இது கரையோர சுற்றுச்சூழலின் பல்லுயிரியலைப் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்வில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா (ஓய்வு) மற்றும் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தின் கடற்படை வீரர்கள் மற்றும் இலங்கை கப்பல் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.