இந்திய கடற்படையின் ‘INS Nireekshak’ கப்பல் தனது அதிகாரப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டது

2023 செப்டெம்பர் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தீவுக்கு வந்த இந்திய கடற்படையின் 'INS Nireekshak' கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2023 செப்டம்பர் 21 ஆம் திகதி தீவை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் திருகோணமலை துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

Diving Support Vessel வகைக்கு சொந்தமான ‘INS Nireekshak’ கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில் கடற்படை சுழியோடி பிரிவுடன் இனைந்து சிறப்பு சுழியோடி பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தியது. மேலும், இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையே நட்புறவை வளர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூடைப்பந்து போட்டி, யோகா பயிற்சி நிகழ்ச்சி மற்றும் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி ஆகியவற்றிலும் கப்பலின் கடற்படையினர் கலந்து கொண்டனர். இந்த கப்பலின் கடற்படையினர் தீவின் பல முக்கிய இடங்களுக்கும் சென்று பார்வையிட்டனர். மற்றும் திருகோணமலை பிரதேசத்தில் சமூக நலத்திட்டங்களிலும் பங்குபற்றினர்.

அத்துடன், இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகள் உட்பட கடற்படையினருக்கு ‘INS Nireekshak’ கப்பலின் செயற்பாடுகளை அவதானிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததுடன், பாடசாலை மாணவர்களும் குறித்த கப்பலைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.

மேலும், வெளிநாட்டு கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய நட்புரீதியான பயணங்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துகின்றன, மேலும் எதிர்காலத்தில் கப்பல்களின் வருகையுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் புதிய அறிவு மற்றும் அனுபவங்கள், கடல் பிராந்தியத்தின் பொதுவான சவால்களை கூட்டாக சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும்.