இந்திய கடற்படையின் ‘INS Nireekshak’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS Nireekshak' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 செப்டம்பர் 14) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

இவ்வாறு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Nireekshak’ என்ற Diving Support Vessel வகையின் கப்பல் 70.5 மீற்றர் நீளமும், 137 கடற்படை வீரர்களும் கொண்டது.

கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் ஜீது சிங் சௌஹான் (Cdr Jeetu Singh Chauhan) மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று காலை (2023 செப்டம்பர் 14) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன் ‘INS Nireekshak’ என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கடற்படை சுழியோடி பிரிவுடன் இணைந்து சுழியோடி பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த கப்பலின் அனைத்து கடற்படையினர் களும் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தீவின் முக்கிய இடங்களை மற்றும் பல பகுதிகளை பார்வையிடவும் உள்ளனர்.

மேலும், 'INS Nireekshak' என்ற கப்பல் 2023 செப்டம்பர் 21 அன்று தீவில் இருந்து புறப்பட உள்ளது.