பஹ்ரைனில் ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் துணை கட்டளை அதிகாரி மற்றும் கடற்படைத் தளபதி இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு

தற்போது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பஹ்ரைனில் உள்ள ஒருங்கிணைந்த கடல்சார் படையின் (The Combined Maritime Forces – CMF) துணை கட்டளை அதிகாரி கொமடோர் பிலிப் எட்வர்ட் டெனிஸ் (Commodore Philip Edward Dennis - Royal Navy) அவர்கள் இன்று (2023 அக்டோபர் 02) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதியால் ஒருங்கிணைந்த கடல் படைகளின் பிரதி கட்டளை அதிகாரி வரவேற்றதன் பின்னர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் சுமூகமான சந்திப்பொன்று இடம்பெற்றது. மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மேலும், ஒருங்கிணைந்த கடல்சார் படையின் (The Combined Maritime Forces – CMF) துணை கட்டளை அதிகாரியுடன் கடற்படைத் தளபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு கடற்படை உதவித் துனைத் தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, கடற்படைத் தளபதியின் உதவியாளர் மற்றும் கடற்படை நீர் அளவி தலைவர் கொமடோர் கோசல வர்ணகுலசூரிய, இலங்கையின் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டெரன் வூட்ஸ் (Colonel Darren Woods) உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர்.