இந்திய கடற்படையின் ‘INS Delhi’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Delhi’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 செப்டம்பர் 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

இவ்வாறாக, கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Destroyer வகையின் போர்க்கப்பலான ‘INS Delhi’, நூற்று அறுபத்து மூன்று தசம் இரண்டு மீட்டர் (163.2) நீளம் கொண்டதுடன் மொத்தம் நானூற்று ஐம்பது (450) கடற்படையினரை கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் அபிஷேக் குமார் மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று காலை (2023 செப்டம்பர் 01) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

மேலும், ‘INS Delhi’ என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்ச்சிகளில், அதன் முழு கடற்படையினரும் பங்கேற்கவும், தீவின் முக்கிய இடங்களை மற்றும் பல பகுதிகளை பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ‘INS Delhi’ என்ற கப்பலைப் பார்வையிடவும், கப்பலில் பயிற்சி பரிமாற்ற நிகழ்ச்சியை நடத்தவும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் 2023 செப்டம்பர் 03 ஆம் திகதி கப்பல் தீவை விட்டு வெளியேறும் போது, அதனுடன் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பலொன்றுடன் கடற்படை பயிற்சியில் (PASSEX) ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.