கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு கொழும்பு ரோயல் கல்லூரியினால் பாராட்டு
கொழும்பு றோயல் கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வொன்று இன்று (2023 ஆகஸ்ட் 31) கொழும்பு ரோயல் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
குறித்த வைபவத்திற்காக றோயல் கல்லூரிக்கு வருகை தந்த கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர். அதன் பின் கல்லூரியின் மேற்கத்திய இசைக்குழுவின் வண்ணமயமான அணிவகுப்புடன் றோயல் கல்லூரிக்குள் குழுவினரை அழத்து சென்றதுடன் றோயல் கல்லூரி கேடட் குழுவினரால் அவர்களை பாராட்டி வரவேற்கப்பட்டனர். றோயல் கல்லூரியின் போர்வீரர் நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர், கல்லூரி அதிபர் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் தலைமையில் கடற்படைத் தளபதி விழாவிற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு உரையாற்றிய ராயல் கெடட் சங்கத் தலைவர் மற்றும் இலங்கை கடற்படையின் 16வது கடற்படை தளபதியாக கடமையாற்றிய அட்மிரல் திசர சமரசிங்க (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படைத் தளபதி பதவி வரை வந்த 36 வருடங்களுக்கும் மேலான சேவை காலத்தில் அவருடைய தொழில்முறை, நேர்மை, நம்பிக்கத்தன்மை, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய உயர்ந்த குணங்கள் ராயல் கல்லூரிக் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்று கூறினார்.
பின்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஒரு பிரகாசமான பழைய மாணவராக ரோயல் கல்லூரியின் பாடநெறி மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளுக்கு எவ்வாறு பங்களித்தார், தனது பாடசாலை வாழ்க்கையின் பின்னர் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து கடற்படையில் சேர்ந்தார் மற்றும் தனது 36 ஆண்டு காலத்தில் கடற்படைக்கு செய்த சேவைகள் அவர் பெற்ற, பதக்கங்கள், விருதுகள் மற்றும் பதவிகள் உள்ளிட்ட விரிவான சன்னஸ் தாளை சபையில் வைத்து கல்லூரி முதல்வர் கடற்படை தளபதியிடம் வழங்கினார்.
அங்கு, கல்லூரியின் 83 குழுவைச் சேர்ந்த திரு.ஜானக கொலன்னகே மற்றும் ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன (ஓய்வு) கடற்படைத் தளபதியை சபைக்கு அறிமுகப்படுத்தியதை அடுத்து, சபையில் உரையாற்றிய றோயல் கல்லூரியின் அதிபர் திரு.திலக் வத்துஹேவா றோயல் கல்லூரி பல முப்படை தளபதிகளை தாய்நாட்டிற்கு வழங்கியதுடன் இலங்கை கடற்படையின் 25 வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டமை றோயல் கல்லூரிக்கு கிடைத்த பாரிய கௌரவம் என்றும் கூறினார்.
பின்னர், விழாவில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, தனது குணாதிசயத்தை வடிவமைத்து, கடற்படைத் தளபதி பதவிக்கு முன்னேறுவதற்கான அடிப்படை அடித்தளத்தை வழங்கிய றோயல் கல்லுரியில் இருந்து சிறப்பு அஞ்சலியைப் பெறுவதில் பணிவும், பெருமையும் அடைகிறேன் என்றார். தனது பாடசாலை நாட்களின் நினைவுகளைத் தூண்டி மேலும் கருத்துகளை தெரிவித்த கடற்படைத் தளபதி, 1974 ஜனவரி முதல் 1987 ஆண்டு ஜூலை வரை பதின்மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் பாடசாலை வாழ்க்கையை சரியாக வடிவமைத்து, வளர்ப்பதற்கும், கற்பிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறார். மேலும் கல்லூரியை விட்டு வெளியேறும் போது மிகவும் தைரியமான, நேர்மையான மற்றும் ஆற்றல் மிக்க இளைஞனாக மாற, பாடசாலையில் பெற்ற கற்பித்தல் பெரும் உதவியாக இருந்தது என்றும் கூறினார். மேலும், அதிக தன்னம்பிக்கையுடன் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு நபராக மாற, இளம் திறமைசாலியாக பாடசாலையில் செய்த பல்வேறு சாகச நடவடிக்கைகள் மற்றும் பிற வெளி நடவடிக்கைகளால் பெரிய ஊக்கத்தை பெற்றதாகக் கடற்படைத் தளபதி கூறினார். றோயல் கல்லூரியின் பிள்ளைகள் போதைப்பொருளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் வலியுறுத்தினார். இறுதியாக றோயல் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர் குழு, இசைக்குழு, கேடட் குழுவினர், சாரணர் குழுவினர், தம்மை அர்ப்பணித்து அஞ்சலி செலுத்திய றோயல் கல்லூரி அபிவிருத்தி சங்கம், உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் நன்றி தெரிவித்தார்.
இதனை முன்னிட்டு, றோயல் கல்லூரியின் இலச்சினையுடன் கூடிய பிரதியொன்று றோயல் கல்லூரி அதிபர் அவர்களால் கடற்படைத் தளபதிக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதியின் பாடசாலைக் காலத்தில் கடமையாற்றிய முன்னாள் அதிபர் உட்பட தற்போதைய அதிபர் மற்றும் ஆசிரியப் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர், கல்லூரியின் நினைவுக் குறிப்பேட்டில் நினைவுக் குறிப்பை வைத்த கடற்படைத் தளபதி, குழு புகைப்படங்களுக்கு முகம் கொடுத்த பின்னர், கல்லூரி கேடட் அறை மற்றும் சாரணர் அறையை அவதானித்து நினைவுக் குறிப்புகளை வைத்தார்.
மேலும், கல்லூரி ஆசிரியப் பணியாளர்கள், முன்னாள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், ராயல் கல்லூரியால் உருவாக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதிகள், முப்படைகளின் மூத்த அதிகாரிகள், தற்போது முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாணவர்கள் என ஏராளமானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.