ஐக்கிய அமெரிக்கா செனட் உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா செனட் உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன் (Chrish Van Hollen) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (2023 ஆகஸ்ட் 30) இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாஹுவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்ததுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சுங் (Juli Chung ) அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதன்படி, இலங்கை கடற்படை கப்பலான கஜபாஹூவிற்கு சென்ற ஐக்கிய அமெரிக்கா செனட் உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன் (Chrish Van Hollen) உட்பட தூதுக்குழுவினரை கடற்படைத் தளபதி வரவேற்றதன் பின்னர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு சின்னங்கள் பரிமாற்றமும் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வுக்காக, இலங்கை கடற்படையின் பிரதிப் துனை தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா, கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் மற்றும் கடற்படை நீர்வாழ் தலைவர் கொமடோர் கோசல வர்ணகுலசூரிய, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் கடற்படை ஆலோசகர் லெப்டினன்ட் கமாண்டர் ஜெசிகா டி மோன்ட் (Lieutenant Commander Jessica De Mont) உட்பட பலர் கலந்துகொண்டனர்.