இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கு ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பணியாளர் பாடநெறியை பயிலும் மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்விப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று (2023 ஆகஸ்ட் 28) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தனர்.
இந்தியாவின் புதுடில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 63வது பணியாளர் பாடநெறியில் பயிலும் 09 மாணவர் உத்தியோகத்தர்கள் இந்த ஆய்வு சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டனர், மேலும் கொமடோர் Arvind Rawal தூதுக்குழுவின் தலைவராக உள்ளார்.
இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்த இந்தக் குழுவினர் சுமூகமான சந்திப்பில் ஈடுபட்டதுடன், கடற்படைத் தளபதி மற்றும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றமும் இடம்பெற்றது.
மேலும், இலங்கை கடற்படையின் பங்கு பற்றி நடத்திய விரிவுரையில் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர், மேலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூத் (Captain Vikas Sood) அவர்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றார்.