சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாகப் பொறுப்பேற்ற எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) இன்று (2023 ஆகஸ்ட் 23) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

இதன்படி, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த பின்னர், கடற்படைத் தளபதி மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறப்பட்டன.