இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள கேர்ணல் முஹம்மட் பாரூக் (Colonel Muhammad Farooq) அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 ஆகஸ்ட் 22) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் பாரூக் (Colonel Muhammad Farooq) அவர்களை கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்ட பின்னர், கடற்படைத் தளபதிக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து சுமூகமான சந்திப்பொன்று நடைபெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.