போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐ.நா அலுவலகத்தால் நடத்தப்பட்ட பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடலோர ரோந்து படகுகள் கையாளுதல் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தில் உலகளாவிய கடல்சார் குற்றவியல் திட்டத்தின் (UNODC-GMCP) கீழ், திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தில் நடத்தப்பட்ட கடல்சார் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்த பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடற்கரை ரோந்து கப்பல் கையாளுதல் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவர் திருமதி Siri Bjune மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தில் தளபதி கொமடோர் புத்திக லியனகமகே ஆகியோர் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2023 ஆகஸ்ட் 18 ஆம் திகதி குறித்த பீடத்தில் நடைபெற்றது.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் கீழ், கடல் வழியாக சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு, கடலோர மற்றும் துறைமுகப் பாதுகாப்புப் பணிகளுக்கு பெண் கடற்படையினர் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளை ஈடுபடுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்தப் பாடநெறிக்காக இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒரு (01) பெண் அதிகாரி மற்றும் இரண்டு (02) பெண் மாலுமிகள் இந்தோனேசிய கடல்சார் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த மூன்று (03) பெண் அதிகாரிகள், மலேசிய கடல்சார் சட்ட அமலாக்க முகவரகத்தைச் சேர்ந்த மூன்று (03) பெண் அதிகாரிகள் உட்பட ஒன்பது பேர் கலந்துகொன்டனர்.

இந்த நான்கு (04) வார பாடநெறியின் கோட்பாட்டு மற்றும் நடைமுறை பயிற்சிகள் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தில் மற்றும் திருகோணமலை கடற்படை துறைமுக பாதுகாப்பு பிரிவில் நடத்தப்பட்டது, இதில் நீர் கடப்பு, கடற்படை அரிவு, கடலோர ரோந்து கப்பல் பொறியியல், மின் மற்றும் மின்னணு அமைப்பு, போர் முதலுதவி, தீ அணைத்தல், கடலோர ரோந்து கப்பல்களை தொடர்புகொள்வது மற்றும் கையாளுதல் பற்றிய அடிப்படை தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவு வழங்கப்பட்டது.

மேலும், கடல்சார் துறையில் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பெண் அதிகாரிகளும் பங்கேற்கும் இத்தகைய சிறப்புப் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்பதன் மூலம், ஒத்துழைப்பு மற்றும் எதிர்காலத்தில் பொதுவான கடல்சார் சவால்களை இணைந்து கட்டுபடுத்த கடற்படை பெண் மாலுமிகளை திறமையாக பணியமர்த்த இலங்கை கடற்படைக்கு வழிவகுக்கும்.