திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறா தீவை பார்வையிட கடற்படை மீண்டும் கப்பல் சேவைகள் ஆரம்பித்துள்ளது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பாடசாலை மாணவர்கள், கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்காக கடற்படை மூலம் ஆரம்பிக்கப்பட்ட திருகோணமலை துறைமுகத்தில் உள்பகுதி மற்றும் நிலாவெளி புறா தீவு பார்வையிடும் சுற்றுலா கப்பல் சேவைகள் 2023 ஆகஸ்ட் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுக வளாகத்தில் உத்தியோகபூர்வமாக தொடங்கியது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் பேரில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் இலங்கை தொண்டர் கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவின் மேற்பார்வையின் கீழ் மீண்டும் தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டம் மூலம் உலகப் புகழ்பெற்ற திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைப் பார்வையிட மற்றும் நிலாவெளி புறா தீவின் பவளப்பாறைகள் பார்வையிட தேவையான கடல் பயண வசதிகள் பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் பெற வாய்ப்பு கிடைக்கும்.
இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் அனில் போவத்த மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.