முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைமையக கட்டிடத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது
அக்குரேகொட முப்படைத் தலைமையக கட்டிடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைமையக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (2023 ஆகஸ்ட் 17) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு) தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.
முன்னாள் படைவீரர் ஒன்றியம் மூலம் ஒன்றிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை உயர் தரத்துடன் மேற்கொள்ளும் வகையில், அலுவலக வளாகம் மற்றும் கேட்போர் கூடத்துடன் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படை சிவில் பொறியியல் துறையின் தொழில்நுட்ப பங்களிப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும், பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி உட்பட முப்படைகளின் சிரேஷ்ட, கனிஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சேவையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கௌரவ அதிதிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.