கொமடோர் ஜகத் லியனகமகே கடற்படையின் வரவு செலவு மற்றும் நிதிக்கான பதில் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார்

கொமடோர் ஜகத் லியனகமகே, இலங்கை கடற்படையின் வரவு செலவு மற்றும் நிதிக்கான பதில் பணிப்பாளர் நாயகமாக இன்று (2023 ஆகஸ்ட் 15,) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி அலுவலகத்தில் பதவியேற்றார்.

கொமடோர் ஜகத் லியனகமகே, வரவு செலவு மற்றும் நிதிக்கான பதில் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்னர் கடற்படை வழங்கல் மற்றும் சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றினார்.

இதன்படி, வரவு செலவு மற்றும் நிதிப் பணிப்பாளராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக்க, பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட கொமடோர் ஜகத் லியனகமகேவிடம் நியமனக் கடமைகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.