இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யப்பட்ட ஊர்காவற்துறை செட்டிப்புலம் ஆரம்ப பாடசாலையின் வசதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன், கொழும்பு றோயல் கல்லூரியின் ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முன்னாள் மாணவர் அறக்கட்டளை மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் டாக்டர். ஜே.ஐ.டி. ராஜய்யா (Dr. JIT Rajiyah) அவர்களின் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்பட்ட ஊர்காவற்துறை செட்டிப்புலம் தமிழ் ஆரம்ப பாடசாலையின் வகுப்பறைகள் கட்டிடம் மற்றும் பிற அபிவிருத்தி செய்யப்பட்ட வசதிகள் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் தலைமையில் 2023 ஆகஸ்ட் 14 ஆம் திகதி மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ், இலங்கை கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன், கொழும்பு றோயல் கல்லூரியின் ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முன்னாள் மாணவர் அறக்கட்டளை (The Royal College Old Boy’s East Coast Foundation in USA) மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் டாக்டர். ஜே.ஐ.டி. ராஜய்யா (Dr. JIT Rajiyah) அவர்களின் நிதியுதவியுடன் ஊர்காவற்துறை செட்டிப்புலம் தமிழ் ஆரம்பப் பாடசாலையில் உள்ள வகுப்பறைக் கட்டிடத்தின் பழுதுபார்க்கும் பணி 2023 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் துரிதமாக புனரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்ட கல்லூரியின் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஏனைய அபிவிருத்தி செய்யப்பட்ட வசதிகள் 2023 ஆகஸ்ட் 14 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த ஊர்காவற்துறை செட்டிப்புலம் தமிழ் ஆரம்பப் பாடசாலையின் அதிபர் திருமதி புஷ்பநேசா விஸ்வநாதன், கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடத்தை புனரமைத்து, பிள்ளைகளின் எதிர்காலக் கல்விக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு கடற்படையினர் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டினார்.

மேலும், இந்நிகழ்வை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வடக்கு கடற்படை கட்டளை தளபதி தலைமையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், கடற்படையினரால் கல்லூரி மாணவர்களுக்கு சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது.

மேலும், இந் நிகழ்வுக்காக கடற்படை கட்டளைத் அதிகாரி (தீவுகள்) கொமடோர் சிசிர திஸாநாயக்க, இலங்கை கடற்படை கப்பல் கஞ்சதேவ நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் றோலண்ட் ரந்தன்ன உட்பட வடக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், ஊர்காவற்துறை செட்டிப்புலம் தமிழ் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட வடக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.