ரியர் அட்மிரல் ரஜிந்த சேரம் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ரஜிந்த சேரம் தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 ஆகஸ்ட் 15) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் ரஜிந்த சேரம் அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

ரியர் அட்மிரல் ரஜிந்த சேரம் 1989 ஆம் ஆண்ட்டில் 19வது உள்வாங்கலின் கெடட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் சேர்ந்தார். அவர், தனது 33 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது மண்டல கிடங்கு அலுவலர் (வட மத்திய), சிரேஷ்ட பணியாளர் அதிகாரி (கிடங்கு கட்டுப்பாடு), கேப்டன் வழங்கல் மற்றும் சேவைகள் திணைக்களம் (தென் கிழக்கு), துணை இயக்குனர் (ஊதியம் மற்றும் ஓய்வூதியங்கள்), கேப்டன் வழங்கல் மற்றும் சேவைகள் துறை (வடமேற்கு), துணை இயக்குனர் சேவைகள், துணை இயக்குனர் கடற்படை கொள்கை மற்றும் திட்டமிடல் (வழங்கள்), துணை இயக்குனர் (சிறப்பு திட்டங்கள்), கொமடோர் வழங்கல் மற்றும் சேவை கண்காணிப்பாளர் (வடக்கு), கொமடோர் வழங்கல் மற்றும் சேவை கண்காணிப்பாளர் (மேற்கு), கொமடோர் வழங்கல் மற்றும் சேவை கண்காணிப்பாளர் (கிழக்கு) ஆகிய பல்வேறு குறிப்பிடத்தக்க பதவிகளில் பணியாற்றினார்.