மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கும் நிகழ்ச்சியொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது
இலங்கை கடற்படையின் சமூக நலத் திட்டங்களின் கீழ், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த மாற்று மையத்தின் இரத்தத் தேவையை நிரப்பும் நோக்கில் ஏற்பாடு செய்த இரத்த தானம் நிகழ்ச்சியொன்று 2023 ஆகஸ்ட் 12 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான தலைமன்னார் இலங்கை கடற்படைக் கப்பல் தம்மன்னா நிறுவனத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த மாற்று நிலையத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட இந்த இரத்ததான நிகழ்ச்சிக்கு வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தம்மன்னா, கஜபா மற்றும் புஸ்ஸதேவ ஆகிய நிருவனங்களின் கடற்படை வீரர்கள் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.
மேலும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் வடமத்திய கடற்படை கட்டளை வைத்தியசாலையின் வைத்திய ஊழியர்கள் இந்த மாபெரும் சமூக நிகழ்வை வெற்றியடையச் செய்ய உதவினர்.