இந்திய கடற்படையின் ‘INS Khanjar’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டது

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 2023 ஜூலை 29 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கடற்படையின் ‘INS Khanjar’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இலங்கை கடற்படை கப்பல் சாகரவுடன் நடத்திய கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2023 ஜூலை 31) நாட்டை விட்டு புறப்பட்டது. இதனிடையே திருகோணமலை துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியின் போது (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கு இடையே செய்திப் பரிமாற்றம் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதைக்குரிய வணக்கங்களை நடத்திய பிறகு இப்பயிற்சி நிறைவுற்றது.

'ஐஎன்எஸ் கஞ்சார்' என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு நாட்டு கடற்படையினரிடையே நட்புறவை வளர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில், ‘INS Khanjar’ கப்பலின் அனைத்து கடற்படையினர்களும் பங்கேற்றன. அதன்படி, யோகா நிகழ்ச்சி, கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் கப்பல்களை பார்வையிடும் மற்றும் கைப்பற்றும் முறைகள் பற்றிய பயிற்சிகள் (Visit Board Search & Seize – VBSS) திருகோணமலை கடற்படை சிறப்புக் கப்பல் படைத் தலைமையகம் நடைபெற்றது. மேலும், கடல்சார் பீடத்தில் அட்மிரல் வசந்த கர்ணகொட ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கலாச்சார கச்சேரியிலும் ‘INS Khanjar’ கப்பலின் கடற்படையினர் பங்கேற்றனர்.

இதேவேளை, இலங்கை கடற்படையினருக்கு திருகோணமலையில் தங்கியிருந்த ‘INS Khanjar’ கப்பலை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. கப்பலின் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள சில சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும் கழந்துக் கொண்டனர்.

மேலும், வெளிநாட்டு கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய நட்புரீதியான பயணங்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துகின்றன, மேலும் எதிர்காலத்தில் கப்பல்களின் வருகையுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் புதிய அறிவு மற்றும் அனுபவங்கள் கடல் பிராந்தியத்தின் பொதுவான சவால்களை கூட்டாக சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும்.