ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE (DD-106)’ கப்பல் வெற்றிகரமான கூட்டு கடற்படைப் பயிற்சிக்குப் பிறகு தீவை விட்டு புறப்பட்டது
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 ஜூலை 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE (DD-106)’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து இன்று (2023 ஜூலை 29) இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாகு கப்பலுடன் நடத்திய கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் தீவிலிருந்து புறப்பட்டதுடன் குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய கடற்படை பிரியாவிடை வழங்கியது.
இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியின் போது (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கு இடையே செய்திப் பரிமாற்றம் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதைக்குரிய வணக்கங்களை நடத்திய பிறகு இப்பயிற்சி நிறைவுற்றது.
‘SAMIDARE (DD-106)’ என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த போது, கப்பலின் கட்டளை அதிகாரி, கமாண்டர் OKUMURA Kenji மற்றும் குறித்த கப்பலின் கொடி அதிகாரியாக வருகைதந்த ஜப்பான் கடல்சார் தற்காப்பு 01வது மேற்பரப்பு குழு படையின் கட்டளை அதிகாரி (Commander, 01st Surface Group) ரியர் அட்மிரல் NISHIYAMA Takahiro ஆகியோர் .மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிவுடன் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளும் நடத்தினர்.
இதேவேளை, இலங்கை கடற்படையினர் கொழும்பில் தங்கியிருந்த காலப்பகுதியில் 'SAMIDARE (DD-106)' என்ற கப்பலை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஜப்பானிய மற்றும் இலங்கை உணவு வகைகளை உள்ளடக்கிய சமையல் நிகழ்வும் கப்பலில் இடம்பெற்றது.
மேலும், SAMIDARE (DD-106) குழு இலங்கை கடற்படையுடன் நட்பு கால்பந்து போட்டியில் விளையாடியது, இரண்டாம் உலகப் போரின் போது இறந்த ஜப்பானியர்களின் நினைவாக நடைபெற்ற மலர் அஞ்சலிக்காகவும் கப்பலின் கடற்படையினர் பொரளை மயானத்திற்கு விஜயம் செய்தனர். மேலும், நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.
மேலும், வெளிநாட்டு கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய நட்புரீதியான பயணங்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துகின்றன, மேலும் எதிர்காலத்தில் கப்பல்களின் வருகையுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் புதிய அறிவு மற்றும் அனுபவங்கள் கடல் பிராந்தியத்தின் பொதுவான சவால்களை கூட்டாக சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும்.