ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாக கெடட் அதிகாரி உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதி வசதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தெற்கு வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய கேடட் உத்தியோகத்தர்களுக்கான உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதி வசதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தலைமையில் இன்று (ஜூலை 28, 2023) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.

மேலும், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் நிர்மாணிக்கப்பட்ட சூழலுக்கான சஞ்சிகையின் (Journal of Built Environment) மற்றும் ‘QUALITY- for Sustainable Future’ என்ற தொழில்துறை இதழின் வெளியீட்டு விழாவும் இந்நிகழ்வுக்கு இணையாக இடம்பெற்றது.

மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், கடற்படையின் கட்டிட பொறியாளர் துறையின் தொழிநுட்ப பங்களிப்புடன், இந்த நவீன முழு வசதிகளுடன் கூடிய கேடட் உத்தியோகத்தர்களின் உணவு விடுதியின் நிர்மாணப் பணிகள் உயர் தரத்துடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கௌரவ அதிதிகள் கலந்துகொண்டனர்.