கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று உத்தியோகபூர்வமாக ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் பொலிஸ் விசேட அதிரடிப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது
தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுவிற்காக இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அந்தப் படையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 2023 ஜூலை 25 ஆம் திகதி கடுகுருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை பாடசாலையில் இடம்பெற்றது.
2022 டிசம்பர் 29 ஆம் திகதி இலங்கை கடற்படைக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலின் கீழ், பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் பங்களிப்புடன் தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாவனைக்காக 20 அடி கொள்கலனில் இந்த நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் நிர்மானிக்கப்பட்டது. சந்தையில் இருக்கும் விலையை விட குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்டு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒரு நாளைக்கு சுமார் 60 டன் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. மேலும் அதன் உற்பத்தி நடவடிக்கைகளை உயர் தரத்துடன் முடித்த பின்னர், அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு 2023 ஜூலை 25 ஆம் திகதி கடுகுருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை பாடசாலையில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் சிரேஷ்ட இணைப்பாளர் கமாண்டர் புத்திக ரந்திமால் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.