கடற்படையினரால் பாடசாலை மாணவர்களுக்கான பல் மருத்துவ மனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக நலத் திட்டமாக, பியகம, தரணாகம ஆரம்ப பாடசாலையில், பாடசாலை மாணவர்களுக்கான பல் மருத்துவ மனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று, இன்று (2023 ஜூலை 27) கடற்படை பல் சேவைகள் பணிப்பாளர் மருந்துவ கொமடோர் நந்தனி விஜேதோரு அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.
இதன்படி, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஆறு (06) கடற்படை பல் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டதுடன், பாடசாலையில் கல்வி கற்கும் 200 சிறுவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நல்ல வாய் ஆரோக்கியத்தை பராமரிப்பதின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அதன்பின், பாடசாலை மாணவர்களுக்கு பல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கான இவ்வாறான சமூகப் நலத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் பங்களிக்க இலங்கை கடற்படை தயாராக உள்ளது.