இலங்கை கடற்படை கப்பல் சயுரலவின் 06 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை கடற்படையினர் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்

இலங்கை கடற்படை கப்பல் சயுரலவின் 06வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஹம்பாந்தோட்டை கடற்கரையை மையமாகக் கொண்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியொன்று இன்று (2023 ஜூலை 25) காலை கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் பிரசன்ன ஹெட்டியாராச்சியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான கடல் சூழலை வழங்கும் நோக்குடன், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகளால் கடல் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டங்களுக்கு கடற்படை தொடர்ந்து பங்களிக்கிறது.

அதன்படி, இலங்கை கடற்படை கப்பல் சயுரலவின் 06 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஹம்பாந்தோட்டை கடற்கரையை மையமாக கொண்டு கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியொன்று இன்று (2023 ஜூலை 25) இலங்கை கடற்படை கப்பல் சயுரலவின் கட்டளை அதிகாரியின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அங்கு, கடற்கரையில் சிதறி கிடந்த பிளாஸ்டிக், பாலிதீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் அதிகளவில் சேகரிக்கப்பட்டு கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டது.

மேலும், இலங்கை கடற்படை கப்பல் சயுரலவின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.