போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மூலம் பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடலோர காவல்படை படகுகள் கையாளுதல் பயிற்சியொன்று தொடங்கப்பட்டது

போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் (UNODC-GMCP) கீழ் கடல்சார் துறையில் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைக்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடலோர ரோந்து படகுகள் கையாளுதல் பயிற்சியொன்று 2023 ஜூலை 24 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தில் தொடங்கப்பட்டது.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் கீழ், கடல் வழியாக சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு, கடலோர மற்றும் துறைமுகப் பாதுகாப்புப் பணிகளுக்கு பெண் கடற்படையினர் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளை ஈடுபடுத்தும் நோக்கத்துடன் இந்தப் பாடநெறி நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்த நான்கு (04) வார பாடநெறியின் கோட்பாட்டு மற்றும் நடைமுறை பயிற்சியை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்திலும் திருகோணமலை கடற்படை துறைமுக பாதுகாப்பு பிரிவிலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தோனேசிய கடல்சார் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த மூன்று (03) பெண் அதிகாரிகள், மலேசிய கடல்சார் சட்ட அமலாக்க முகவரகத்தைச் சேர்ந்த மூன்று (03) பெண் அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒரு (01) பெண் அதிகாரி மற்றும் இரண்டு (02) பெண் மாலுமிகள் உட்பட ஒன்பது பேர் இந்தப் பாடநெறியில் கலந்துகொள்வார்கள்.