ரியர் அட்மிரல் நிஷாந்த அமரோசா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் நிஷாந்த அமரோசா தனது புகழ்பெற்ற கடற்படை வாழ்க்கைக்கு இன்று (2023 ஜூலை 23) விடைபெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரியர் அட்மிரல் நிஷாந்த அமரோசவுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான கடற்படை முகாமைத்துவ சபையினால் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், கடற்படை மரபுப்படி விசேட வைபவம் ஒன்றும் இடம்பெற்றது. பின்னர், சக அதிகாரிகளிடம் பிரியாவிடை பெற்ற பின்னர், சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படையினர் வீதியின் இருபுறங்களிலும் நின்று கடற்படையின் மரபுப்படி ரியர் அட்மிரல் நிஷாந்த அமரோசாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரியர் அட்மிரல் நிஷாந்த அமரோசா, 1988 ஆம் ஆண்டில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 18வது உள்வாங்கலில் கேடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்தார், தனது 35 வருட சேவையின் போது பல்வேறு கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். மேலும், அவர் சிரேஷ்ட பணியாளர் அதிகாரி (கடற்படை பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டம்), கட்டளை செயல்பாட்டு அதிகாரி (வடமேற்கு), கட்டளை ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரி (வடமேற்கு), சிரேஷ்ட பணியாளர் அதிகாரி (நலம்), துணை இயக்குனர் கடற்படை நலன், இயக்குனர் கடற்படை ஆய்வு பிரிவு, கடற்படை கட்டளை அதிகாரி (ஹம்பாந்தோட்டை) மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக வசதி பாதுகாப்பு அதிகாரி, துணைத் தளபதி வட மத்திய கடற்படைப் பகுதி, கடற்படை நலன் இயக்குநர் மற்றும் கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளை போன்ற முக்கிய பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரி ஆவார்.